» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக ஆணையம் சாம்பியன்!
சனி 28, மார்ச் 2026 12:40:18 PM (IST)

கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய முக்கியத் துறைமுகங்களுக்கு இடையிலான 47-ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையத்தின் சார்பில், கடந்த 24.03.2026 முதல் 27.03.2026 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் ஆறு முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்றன.
தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையமும் மோதின. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் சமபலத்துடன் போராடிய நிலையில், இறுதியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







