» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: இளைஞர்கள் இருவர் படுகாயம்!

சனி 28, மார்ச் 2026 11:30:52 AM (IST)

தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை மாடு குறுக்கே வந்ததால் நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். 

தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 3-வது தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் அபிஷேக் (22), தாளமுத்து நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் யோவான் (23)நகர் ஆகிய இருவரும் இன்று அதிகாலை வேப்பிலோடையிலிருந்து தூத்துக்குடி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

பட்டினமருதூர் தனியார் கம்பெனி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று வந்துள்ளது. இதில் நிலைதடுமாறிய இளைஞர்கள், வாகனத்துடன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்கள்.

இந்த விபத்தில் இருவருக்கும் முட்டி, கன்னம் மற்றும் உதடு ஆகிய பகுதிகளில் பலத்த ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory