» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாகத் தந்தை புகார்!

சனி 28, மார்ச் 2026 9:03:23 AM (IST)

காயல்பட்டினத்தில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் ஒருவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டிமுருகன் மகள் தர்ஷினி (20). இவரும், இவரது உறவினரான காயல்பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரத்தீஸ்வர் (24) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு, காயல்பட்டினம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்ற தர்ஷினியை, அவர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்ஷினி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது குறித்துத் தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார், தர்ஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி தந்தை பாண்டிமுருகன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமான ஏழாண்டுகளுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், சட்ட விதிமுறைப்படி திருச்செந்தூர் சார் ஆட்சியர் கவுதம் இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory