» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சத்துணவு பெண் ஊழியரிடம் அத்துமீறல்: வாலிபர் கைது!
சனி 28, மார்ச் 2026 8:40:48 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே விறகு பொறுக்கச் சென்ற சத்துணவு மையப் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து, நகை பறிக்க முயன்ற வாலிபரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிறுநாடார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், மாதவன்குறிச்சி சத்துணவு மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலை, அவர் விறகு சேகரிப்பதற்காகச் சிறுநாடார்குடியிருப்பு - பெரியபுரம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், வழி கேட்பது போலப் பேச்சு கொடுத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண்மணி மல்லுக்கட்டிப் போராடி, அங்கிருந்து ஊருக்குள் ஓடி வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், அந்தப் பெண் அணிந்திருந்த நகையைத் தங்கச் செயின் எனத் தவறாக எண்ணிப் பறித்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையில், இப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டவர் பள்ளிபத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (28) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யோகேஸ்வரனைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







