» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

சனி 28, மார்ச் 2026 8:32:19 AM (IST)

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சதீஷ் (45) என்பவர், மாரியம்மாளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு மாரியம்மாளைத் தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாரியம்மாள் இது குறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சதீஷை காவல் துறையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory