» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் தொகுதி: 75 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாகப் போட்டியிடும் பாஜக!
சனி 28, மார்ச் 2026 8:29:09 AM (IST)
கோயில் நகரான திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், 2026 தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக நேரடியாகக் களமிறங்குகிறது.
திருச்செந்தூர் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும் ஒரு தொகுதியாகும். இம்முறை அதிமுகதான் போட்டியிடும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி இதுவரை 15 பொதுத்தேர்தல்களையும், 2 இடைத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது. இதில், விவசாயத் தொழிலாளர் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும், அதிமுக 6 முறையும், திமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சாத்தியமான வேட்பாளர்:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறுமுகனேரியைச் சேர்ந்த கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். வரும் தேர்தலில் போட்டியிட வேண்டி சில மாதங்களாக பாஜக தலைமையிடம் அவர் வாய்ப்புக் கேட்டு வருவதால், அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







