» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகைப்படக் கலைஞரின் பைக் திருட்டு: இளைஞர் கைது!

சனி 28, மார்ச் 2026 8:24:40 AM (IST)

கோவில்பட்டியில் ஏடிஎம் மையம் அருகே  நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீசார் கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிழக்கு பாண்டவர்மங்கலம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். புகைப்படக் கலைஞரான இவர், கடந்த புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தைக் கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் (ATM) மையம் அருகே நிறுத்திவிட்டு மதுரைக்குச் சென்றுள்ளார்.

மறுநாள் வியாழக்கிழமை அவர் திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து ஜெயராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தைத் திருடியது நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அருகன்குளம், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி (எ) கார்த்திக் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் கந்தசாமியைக் கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை மீட்டனர். பிடிபட்ட இளைஞரிடம் வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory