» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் - பணிக்குழு நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

சனி 28, மார்ச் 2026 8:19:18 AM (IST)



2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு நிகழ்ச்சி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநகரத் தலைவர் ஷேக் முகைதீன் தீன் அலி தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் சேக் ஜான் ராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர் யூசுப், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் பட்டியலை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கிவிட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் செண்பக ராஜ், பிரவீன் குமார், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் சம்சுதீன், மாநகரச் செயலாளர் செய்யது அலி, மாநகரப் பொருளாளர் யூனுஸ், ஐ.பி.பி. மாநகரச் செயலாளர் நைனா முகமது மற்றும் ஜாகிர் உசேன் நகர் கிளைத் தலைவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவாக, மாநகரத் துணைத் தலைவர் காம்ப்ளக்ஸ் சேக் மைதீன் நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory