» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகற்றப்படாத வி.சி.க. சுவர் விளம்பரம்: தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:47:54 PM (IST)
குரும்பூர் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அகற்றப்படாமல் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுவர் விளம்பரம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிப் பறக்கும் படை (பொறுப்பு) அலுவலர் வைரவேல் தலைமையிலான குழுவினர் நேற்று குரும்பூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் குழுவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், காவலர்கள் குமரேசன், சரவணக்குமார் மற்றும் பெண் காவலர்கள் செல்வி, விஜயமலர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அம்பலப்பிறப்பு - திருமலாபுரம் சந்திப்பு அருகே உள்ள ஒரு கோயில் சுவரில், சட்டமேதை அம்பேத்கர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் படங்களுடன் கூடிய தேர்தல் விளம்பரம் அகற்றப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் இத்தகைய விளம்பரங்கள் இருப்பது விதிமீறலாகும்.
இது குறித்துப் பறக்கும் படை அலுவலர் வைரவேல் அளித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் தேர்தல் விதிமுறை மீறல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றிச் சுவர் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







