» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பாதுகாப்பு ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:36:26 PM (IST)

தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத், இன்று (27.03.2026) பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நாளை (28.03.2026) அந்தந்த தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கீழ்க்கண்ட மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்:
• விளாத்திகுளம் தொகுதி: எட்டயபுரம் சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
• கோவில்பட்டி தொகுதி: பாண்டவர்மங்கலம் நாடார் மேல்நிலைப் பள்ளி.
• ஓட்டப்பிடாரம் தொகுதி: புதியம்புத்தூர் ஜான் டி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி.
• தூத்துக்குடி தொகுதி: காமராஜ் கல்லூரி.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: முன்னதாக, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் 'ரேண்டம்' (Random) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த பாதுகாப்புடன் காப்பறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அங்கு வரப்பெறும் புகார்கள் மற்றும் தகவல்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), ஹிமான்ஷீ மங்கள், (கோவில்பட்டி), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), மி.பிரபு (தூத்துக்குடி) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







