» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வெள்ளி 27, மார்ச் 2026 5:36:48 PM (IST)

தூத்துக்குடியில் வணிக எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு உணவகங்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடியிலும் சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. சிலிண்டர் கிடைக்காததால் பல உணவகங்கள் தங்கள் 'மெனு' கார்டில் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. வேறு வழியின்றி பல கடைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி பூபல்ராயபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. இங்குள்ள ஒரு பிரபல உணவகத்தில், பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்க சிலிண்டருக்குப் பதிலாக விறகு அடுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
விறகு அடுப்பில் நெருப்பைத் தக்கவைக்க மின்விசிறிகளை வைத்து காற்று வீசும் சூழல் உள்ளது. இதனால் வெளிப்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் புகையினால் சமையல் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் உடல்நல பாதிப்புக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
"சிலிண்டர் எப்போது வரும்?" என்ற ஏக்கத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கும் உணவக உரிமையாளர்கள், விறகு அடுப்புக்கு மாறியதால் சமையல் நேரம் அதிகரிப்பதோடு, சுவையையும் பராமரிப்பதில் சவால்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். மத்திய அரசு தலையிட்டு எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்யாவிட்டால், நடுத்தர மற்றும் சிறிய வகை உணவகங்கள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







