» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் 25வது விளையாட்டு விழா

வெள்ளி 27, மார்ச் 2026 3:11:03 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் பேசுகையில், "தினமும் 45 நிமிடம் விளையாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். விளையாட்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதோடு, தீய பழக்கங்களிலிருந்து அவர்களைக் காக்கும். இந்திய அளவில் நமது பல்கலைக்கழகம் விளையாட்டுத் துறையில் 4-வது இடத்தில் உள்ளது பெருமைக்குரியது," எனத் தெரிவித்தார்.

பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கல்லூரி வரை மாணவர்கள் தொடர் ஓட்டமாக வந்து ஜோதியை ஏற்றி வைத்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் துரைராஜ் மற்றும் பெண்கள் பிரிவில் சரண்யா வென்றனர். 2025-26ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக மாணவர் விஷால் தேர்வு செய்யப்பட்டார்.

நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரிச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். உடற்கல்வித் துறைத் தலைவர் செல்லத்துரை ஆண்டறிக்கை வாசித்தார்.



நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயபாலன், மாரியப்பன், வழக்கறிஞர்கள் அரவிந்த், செல்வம் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார். உடற்கல்வித் துறை பேராசிரியர்கள் ஜெயசிவா, ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory