» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: தூத்துக்குடியில் 19,271 மாணவ, மாணவிகள் எழுதினர்!

வெள்ளி 27, மார்ச் 2026 8:28:07 AM (IST)

பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 26) நிறைவடைந்தன. தேர்வுகள் முடிந்து மையங்களில் இருந்து வெளியே வந்த தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்முறை 8,547 மாணவர்கள், 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 93 தேர்வு மையங்களில், பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். 

கடைசித் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள், பள்ளி வளாகங்களுக்கு முன் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட கால நண்பர்கள் பிரியும் தருணம் என்பதால், பல மாணவர்கள் ஒருவருக்கொருவர் சீருடைகளிலும் நோட்டுப் புத்தகங்களிலும் 'ஆட்டோகிராப்' (கையெழுத்து) வாங்கி நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர்.

தேர்வுகள் இனிதே முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அடுத்தகட்டமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory