» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் திருவிழா மோதலில் தம்பதி மீது தாக்குதல்: அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது!

வெள்ளி 27, மார்ச் 2026 8:17:38 AM (IST)

இளையரசனேந்தல் பகுதியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், தம்பதியினரை வீடுபுகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி உட்பட 3 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கீழத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி ஆவுடையம்மாள். அப்பகுதியில் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவின் போது, கார்த்திக் ராஜா ஆடிய விதம் குறித்து அங்கிருந்த இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஊர் மக்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் இரவு கீழத் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன்கள் அஜித்குமார் (29), முனீஸ்வரன் (27) மற்றும் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த சேகர் (27) ஆகிய மூவரும் கார்த்திக் ராஜாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கார்த்திக் ராஜாவைத் தாக்கியதோடு, தடுக்க வந்த அவரது மனைவி ஆவுடையம்மாளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த தம்பதியினர் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆவுடையம்மாள் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அஜித்குமார், முனீஸ்வரன் மற்றும் சேகர் ஆகிய மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory