» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 3:29:27 PM (IST)
பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தில் பங்குனி மாதம் என்பது சிறப்பிற்குரிய மாதமாகும். இதில் வரும் 12-வது நட்சத்திரமான உத்திரம், பங்குனி உத்திரத் திருநாளாக இந்து மக்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இந்நாளில் மக்கள் தங்கள் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதையும், குடும்ப விழாக்களையும் மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே ஏப்ரல் 1-ம் தேதியை பங்குனி உத்திரத்திற்காக உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். அதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலதெய்வ வழிபாடும், சாஸ்தா கோவில்களும் அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகளையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருநாளை ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை நாளாகக் கடைபிடிக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என இந்து முன்னணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த கோரிக்கையினை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







