» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: மாணவிகள் ஆர்வம்!
வியாழன் 26, மார்ச் 2026 12:28:39 PM (IST)

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
"வாக்கு எனும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமே சிறந்த ஜனநாயகம் அமையும்" என்ற கருத்தை முன்னிறுத்தி, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் "ஓட்டுப் போட்டு வழியைக் காட்டு” என்ற மையக்கருத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி, ஜே.சி.ஐ பியல் சிட்டி குயீன் பீஸ் மற்றும் புனித மரியன்னை கல்லூரி 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தினர் இணைந்து கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். திரேஸ்புரம் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியைத் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற புனித மரியன்னை கல்லூரி மாணவிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி, கடற்கரைச் சாலை வழியாகச் சென்று முத்துநகர் கடற்கரையில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், காமராஜ் கல்லூரிப் பேராசிரியர் தேவராஜ் மற்றும் ஜே.சி.ஐ நிர்வாகிகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







