» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் அனல்மின் நிலைய ஊழியர் பலி; மேலும் 2 இளைஞர்கள் படுகாயம்
வியாழன் 26, மார்ச் 2026 11:53:11 AM (IST)
தூத்துக்குடியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), இவருக்கு அகிலா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மனோஜ்குமார் தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் - முத்தையாபுரம் சாலையில், சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே அவர் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் அவரது பைக் மீது மோதியது. இந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பழையகாயல் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கவிஸ்கர் (20), மற்றும் அவரது நண்பர் ஹேமந்த் (21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்துத் தகவலறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மனோஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







