» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சிறப்புப் பள்ளியில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்!

வியாழன் 26, மார்ச் 2026 11:40:50 AM (IST)



திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நாசரேத் திருமறையூரில் அமைந்துள்ள கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவிற்குத் திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்புப் பள்ளியின் தாளாளர் டேவின் சாலமோன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை சார்பில் இந்தச் சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. 

கல்லூரி மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும், மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைத் தலைவி ஆக்னஸ் பிரேமா மேரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், துறைப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி முதல்வர் மெற்றில்டா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory