» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வியாழன் 26, மார்ச் 2026 11:36:47 AM (IST)
கழுகுமலையில் பைக் மீது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ். பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பெருமாள் (52), இவர் நேற்று இரவு தனது ராயல் என்பீல்டு பைக்கில் கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். கெச்சிலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கழுகுமலை சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாகப் பெருமாள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம், கீழ நவிதா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் ராசு (46), என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







