» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வியாழன் 26, மார்ச் 2026 11:04:20 AM (IST)

கோவில்பட்டியில் ஓசியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடை உரிமையாளரை, அரிவாளால் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் உள்ள பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (புதன்கிழமை) இரவு, இவரது கடைக்கு வந்த மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள், ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர்.
இலவசமாகச் சிகரெட் தர ஜோதி மறுத்ததால், அந்த இளைஞர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியின் தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நிலைமை தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







