» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடி வேட்பாளர் என்.ஏ.கிதர் பிஸ்மி : 10 வாக்குறுதிகள் அறிவிப்பு

வியாழன் 26, மார்ச் 2026 8:55:01 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் என்.ஏ.கிதர் பிஸ்மி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

விரைவில் நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் என்.ஏ.கிதர் பிஸ்மி கட்சித் தலைவர் தி.வேல்முருகனால் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இவர், நீட் தேர்வு ரத்து மற்றும் தமிழகத்தின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுதல். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் தூத்துக்குடி இளைஞர்களுக்கு உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை. 

கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தூத்துக்குடியை உருவாக்குதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார். மக்களின் குரலாய் சட்டமன்றத்தில் ஒலிக்க தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என வேட்பாளர் என்.ஏ.கிதர் பிஸ்மி தொகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory