» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தாய் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
வியாழன் 26, மார்ச் 2026 8:39:15 AM (IST)
கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, தனது இரண்டு குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (35). இவர் அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வினோதினி (32). இந்தத் தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோதினி, விபரீத முடிவெடுத்துள்ளார். வீட்டில் இருந்த குளிர்பானத்தில் எலி மருந்தை (Rat Poison) கலந்து, தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டுத் தானும் அதைக் குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாகத் தாயே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







