» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் வெளியேற்றம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:20:33 AM (IST)
தூத்துக்குடியில் தலைமை அஞ்சலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மதுரை கோட்ட தலைமை அஞ்சலகத்திற்கு நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில், ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரே உள்ள தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மதுரை அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த கண்காணிப்பாளர் செந்தில்குமார் இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். உடனடியாக அஞ்சலகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அஞ்சலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரச் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத் தீவிரச் சோதனைக்குப் பிறகு, அஞ்சலகத்தில் வெடிபொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்தச் சோதனையின் காரணமாக அஞ்சலகப் பணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டன. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்துப் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







