» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:13:07 AM (IST)
ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் தலைமை காவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில், கடையின் உரிமையாளர் பீார் முஹம்மது (37) என்பவர் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 3.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பீார் முஹம்மது அளித்த தகவலின் அடிப்படையில், ஆறுமுகனேரி அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் (36) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவல்துறையினர் ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ புகையிலைப் பொருட்களுடன் வந்த பாலகணேஷைப் பிடித்து விசாரித்ததில், அவர் மற்றொரு இடத்தில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்த 33 மூட்டைகள் கண்டறியப்பட்டன. அவரிடமிருந்து மொத்தம் 34 மூட்டைகளில் இருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் ஆகும். இது தொடர்பாகத் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் திலீபன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, பீார் முஹம்மது மற்றும் பாலகணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







