» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காற்றாலையில் வேலை பார்த்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:56:10 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே காற்றாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர், சக ஊழியர் தவறவிட்ட கருவி தலையில் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்சிங் தாக்கூர் (32). இவர் 'யாஷ் இன்ஜினியரிங்' என்ற துணை ஒப்பந்த நிறுவனத்தின் மூலம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 'லீப் கிரீன்' காற்றாலை நிறுவனத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக வந்திருந்தார்.
இன்று வழக்கம்போல் காற்றாலை கோபுரத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தன்சிங் தாக்கூர் சுமார் 30 மீட்டர் உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு மேலே உயரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள், கையில் வைத்திருந்த ஒரு கருவியை எதிர்பாராதவிதமாகத் தவறி விட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கருவி நேராகக் கீழே பணியில் இருந்த தன்சிங் தாக்கூரின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர், சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தட்டப்பாறை போலீசார், உயிரிழந்த தன்சிங் தாக்கூரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







