» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி கொலை வழக்கு: குற்றவாளியை விரைந்து கைது செய்த 116 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
புதன் 25, மார்ச் 2026 8:24:02 PM (IST)
கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டுக் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்த 116 காவல் துறையினருக்குத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த வழக்கில் துப்பு துலக்கத் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் சுனில், சுதீர், சுந்தரபாண்டியன், ஜெகநாதன், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல் V கோபால், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தடய அறிவியல் உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு அதிரடியாகக் கைது செய்தனர்.
வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய 11 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 116 காவல்துறையினரின் சேவையைப் பாராட்டும் விதமாக, மாவட்டக் காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் அனைவருக்கும் நற்பணிச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







