» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா
புதன் 25, மார்ச் 2026 8:01:59 PM (IST)

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 10 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள், ஒரு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
இதேபோல் ஈரோட்டில் நடந்த பொதுஅறிவு போட்டியில் மாநில அளவில் 2ம் இடம் பெற்ற மனைவி கீர்த்தனா மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 11 மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிலம்பத்தில் வேர்ல்ட் ரெக்கார்ட் படைத்த மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டன.
இந்நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் (பொ) சந்திரசேகர் வரவேற்றார்.
மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2025&2026ம் கல்வியாண்டில் பள்ளிக்கு தினமும் வருகை தந்த மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் மற்றும் சீருடை சரியாகவும் நேர்த்தியாகவும் அணிந்து வந்த மாணவர்களுக்கும் மெரிட், டிப்டாப், பெர்பெக்ட் பதக்கங்கள் வகுப்பு வாரியாக வழங்கப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், விஜயலட்சுமி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் ராஜகுமார் தொகுத்து வழங்கினார். ஆங்கிலப்பள்ளி முதல்வர் மௌலாதேவி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







