» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் விரலி மஞ்சள், பீடி இலைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!
புதன் 25, மார்ச் 2026 4:43:14 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விரலி மஞ்சள் மற்றும் பீடி இலைகளை க்யூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி நகர உட்கோட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள டென்னிஸ் மனைவி ஆரோக்கிய மேரி என்பவருக்குச் சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்ட பழைய வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விரலி மஞ்சள் சுமார் 20 கிலோ எடை கொண்ட 32 மூட்டைகள், பீடி இலைகள் சுமார் 15 கிலோ எடை கொண்ட 11 மூட்டைகள் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட இந்த விரலி மஞ்சள் மற்றும் பீடி இலைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காகத் தூத்துக்குடி சுங்கத்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. கடல் வழியாக இந்தக் கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







