» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 25, மார்ச் 2026 4:16:52 PM (IST)

தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கும் தேர்தலுக்குப் பின் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தூத்துக்குடி அண்ணாநகரில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.
அமைச்சரின் உரையில் "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உள்ளதால் 42% பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் தமிழகத்தில் 49 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கொரோனா காலத்தில் கடைகளை அடைக்கச் சொல்லி வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினரின் அராஜகம் அதிமுக ஆட்சியில் உச்சத்தில் இருந்தது. திமுக ஆட்சியில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் தமிழக அரசு 600 ஏக்கர் நிலம் வழங்கி தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி முதல் அங்கு இரவு நேர விமானச் சேவை தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கும் தேர்தலுக்குப் பின் பட்டா வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







