» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கல்லூரியில் அழகி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதன் 25, மார்ச் 2026 4:09:40 PM (IST)



தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வீராங்கனைக் குழு சார்பாக "அழகி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ சிறப்புரை ஆற்றினார். முக்கிய விருந்தினராக சமூக ஆர்வலரும், ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியருமான பாத்திமா பாபு பங்கேற்றார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத் தொழிலாளர்கள் வெங்கடேஸ்வரி, காளீஸ்வரி மற்றும் ஆனந்தஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சுகாதாரத் தொழிலாளர் காளீஸ்வரி, தனது அன்றாடப் போராட்டங்கள், கல்வி மற்றும் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ச்சி மிகுந்த முறையில் விவரித்துப் பேசினார். 

தொடர்ந்து சக்தி என்பவரின் பறை இசையுடன், பெண்களின் உள்நிலைச் சக்தியைக் கொண்டாடும் துணிச்சலான பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எளிய உழைப்பாளர்களையும் பெண்களின் சுயசக்தியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory