» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்று வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
புதன் 25, மார்ச் 2026 4:04:21 PM (IST)
மாற்று வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அண்ணாநகரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றிப் புதிய சாலைகள், குடிநீர் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர், தற்போது தினமும் 24 மணி நேரமும் கிடைக்கும்படி மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அறிவிப்போடு நின்ற விவிடி மேம்பாலத் திட்டத்திற்கு மாற்றாக, முட்டுச்சந்தாக இருந்த பல பகுதிகளை விரிவாக்கம் செய்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் இழந்தது போல், இந்தத் தேர்தலிலும் நடக்க வேண்டும். மக்கள் நலன் காக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் எப்போதும் கதாநாயகன். எனவே, சாதனைகளுக்காகப் பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூரியன் சின்னத்திற்கே வர வேண்டும்.என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







