» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதுபாட்டில்கள் கேட்டு தகராறு: டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கிய பார் உரிமையாளர் மீது வழக்கு!

புதன் 25, மார்ச் 2026 3:42:22 PM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், கூடுதல் மதுபாட்டில்கள் தராததால் விற்பனையாளரைத் தாக்கிய பார் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் பார் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு அன்புராஜ் அந்த மதுபானக் கடையின் விற்பனையாளரிடம் வழக்கத்தை விட அதிக அளவில் மதுபாட்டில்களைக் கேட்டாராம். 

அதற்கு அந்த விற்பனையாளர், "தேர்தல் நேரத்தில் அதிகப்படியான மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று எங்களுக்குக் கடுமையான உத்தரவு வந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட அளவிற்கு மேல் மதுபாட்டில்களைத் தர முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில், ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் அன்புராஜ், விற்பனையாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விற்பனையாளர் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் அன்புராஜை தேடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடையிலேயே விற்பனையாளர் தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory