» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாயமான சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை..!
புதன் 25, மார்ச் 2026 3:33:26 PM (IST)
தூத்துக்குடியில் மாயமான சிறுவன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, 8-வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் மதன் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மதன், தனது உறவினர் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மதன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது தாயார் காவேரி, இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து மதனைத் தீவிரமாகத் தேடி வந்தார்.
தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு சில்வர்புரம் மாறன் கோவில் குளம் அருகே மதனின் செல்போன் கிடப்பதை பொதுமக்கள் கண்டெடுத்தனர். அந்த செல்போனைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிப்காட் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, மதன் குளத்திற்குள் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட மதனின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிகிறது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதன் குளத்தில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)







