» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தொழில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா

செவ்வாய் 24, மார்ச் 2026 3:16:18 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பட்டப்படிப்புடன் கூடுதலாக, வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் ரோபாட்டிக்ஸ் (Robotics) லேப்டாப் மற்றும் மொபைல் பழுதுநீக்கும் பயிற்சிகள் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அழகுக்கலை மற்றும் ஆரி ஒர்க் (Aari Work) வங்கி, காவலர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஸ்போக்கன் இங்கிலீஷ், சுருக்கெழுத்து மற்றும் சிலம்பம் போன்ற பயிற்சிகள் 6 மாதம் முதல் ஓராண்டு வரை வழங்கப்பட்டன. 

இப்பயிற்சிகளில் பங்கேற்றுத் தேர்ச்சி பெற்ற 480 மாணவர்களுக்கு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் எஸ்.ஆர். ராஜரத்தினம், ரோட்டரி சங்கத் துணைத் தலைவர்முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிப் பேராசிரியர் ஸ்ருதி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முதுநிலை மேலாளர் ஆறுமுக கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதியுடன் இத்தகைய தொழில் திறன்களை வளர்த்துக்கொள்வது அவர்களின் எதிர்கால வாழ்விற்குப் பேருதவியாக இருக்கும்" எனப் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், டி.எம்.பி வங்கி உதவி மேலாளர் மகேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் செல்வலட்சுமி, பிரியங்கா, செல்வம், ரமேஷ், செல்லத்துரை, ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக, கல்லூரிப் பேராசிரியர் கற்குவேல்ராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory