» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் பாதுகாப்பாக இடமாற்றம்

செவ்வாய் 24, மார்ச் 2026 11:04:12 AM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சுவிட்ச் போர்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் 5-வது தளத்தில் அமைந்துள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தின் மின் சுவிட்ச் போர்டில் இன்று திடீரெனத் தீப்பிடித்தது. சுவிட்ச் போர்டு எரிந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தீப்பிடித்ததைக் கண்டவுடன் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்தத் தளத்திற்கான மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5-வது தளத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக 4-வது தளத்திற்கு மாற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory