» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஜய், எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
செவ்வாய் 24, மார்ச் 2026 10:56:41 AM (IST)

முதல்வர் பதவியை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் நடிகர் விஜயின் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 3-ம் மைல் பகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், "மத்திய அரசு 2050-ல் எட்ட நினைக்கும் 50% உயர்கல்வி இலக்கை, தமிழகம் இப்போதே 52% அடைந்து இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது. கலைஞர் கனவு இல்லம்' திட்டம் மூலம் ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கணினித் துறை வளர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான சாதனைகளைப் படைத்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஜாதி, மதக் கலவரங்கள் இன்றி அமைதி நிலவுகிறது. மதம், ஜாதி பாராமல் 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறுகிறது. தமிழக நலனைப் பாதுகாக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் பதவியை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் நடிகர் விஜய் ஆகியோரின் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கட்டமைப்புப் பணிகள் தடையின்றித் தொடர, வரும் தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







