» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் அருகே தகராறு: ஒருவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:34:53 AM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட மோதலில், ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி என்ற ராகவன் (35). இவரது தம்பி ஆதிகேசவன் (27). இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெர்மல் நகர் கேம்ப்-1 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ராகவன், ஆதிகேசவன் மற்றும் காதர் மீரான் நகரைச் சேர்ந்த முத்துராமன் (42) ஆகியோர் நாணயத்தைச் சுண்டிவிடும் விளையாட்டில் (சூதாட்டம்) ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
விளையாட்டின் போது இவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்களான ராகவனும், ஆதிகேசவனும் சேர்ந்து முத்துராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துராமன், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆதிகேசவனைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராகவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







