» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:32:05 AM (IST)
தூத்துக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு காதர் மீரான் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கும்பலாக நின்று பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த போலீசார் அந்த இடத்திற்குச் சென்று அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறி விசாரணை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல், போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த ரீத்தன் (22) உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்து தப்பியோடிய மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







