» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: மார்ச் 31-ல் தேரோட்டம்!

செவ்வாய் 24, மார்ச் 2026 8:09:35 AM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திரத் திருவிழா நேற்று (மார்ச் 23) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்குக் கொடிமர பீடத்திற்குப் பால், தயிர், நெய், மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, காலை 7 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்கத் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டு, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, செம்மநாட்டார் தேவர் சமுதாயம் சார்பில் முதல் நாள் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) அன்று விமரிசையாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முருகப்பெருமான் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory