» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 24, மார்ச் 2026 8:07:35 AM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியைத் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, பாளையங்கோட்டை சாலை, 3-வது மைல், மில்லர்புரம், வி.வி.டி. சந்திப்பு மற்றும் காய்கறி மார்க்கெட் சந்திப்பு வழியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
பேரணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களில் கலந்துகொண்டனர். "ஜனநாயகக் கடமையாற்றுவோம்", "100 சதவீதம் வாக்களிப்போம்" உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







