» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:01:42 AM (IST)
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் மாவட்டத் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த இசக்கி செல்வம், கோரம்பள்ளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த மேக்சன் சாமுவேல் என்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







