» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் வெளியீடு - 22 வழக்குகள் பதிவு!

செவ்வாய் 24, மார்ச் 2026 7:53:06 AM (IST)

வேடநத்தம் படுகொலை சம்பவத்தில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக சிறுமியின் விவரங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மாவட்டக் காவல்துறை இது தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையில்: "பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory