» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்

திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)



தூத்துக்குடியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி. ராஜா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற அமைப்பாளர் தங்கேஸ்வரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளை பூத் நிலை வரை கொண்டு சென்று, தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் தவறவிடப்படாமல் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியசீலன், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் வாரியார் சிவராமன் மாசாணம், மாவட்ட அலுவலக செயலாளர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் லிங்க செல்வம், சுதா, ராஜேஷ், கனி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிலரங்கம் மற்றும் மாநாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி–பிரிவு, மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory