» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!
புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)
கோவில்பட்டியில் தந்தை இறந்த மனவேதனையில் பொறியியல் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கணேஷ் நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் ஞானசேகர் (24). பொறியியல் பட்டதாரி. இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். இவரது தந்தை பெருமாள்சாமி 2023 ஆம் ஆண்டு புற்றுநோயினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஞானசேகர் கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த கடற்கரை மகன் பழனிச்சாமி (85). கூலி தொழிலாளியான இவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








