» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை பறிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:48:22 AM (IST)
நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆனந்தராஜ் (35). இவர், சென்னையில் வேலை செய்து வருகிறார். கடந்த 28.3.2024 அன்று, தனது உறவினர் வீட்டுக்கு ஊருக்கு வந்திருந்தபோது, அன்று இரவு மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த சிவன்பாண்டி மகன் சந்தோஷ்குமார் (22), சக்திவேல் மகன் தினேஷ்குமார் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவராமமங்கலம் மகாராஜன் மகன் சிவா (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம்-2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) விஜய ராஜ்குமார், குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)










