» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில் விமானகோபுரம் பாலஸ்தாபனம்

திங்கள் 8, டிசம்பர் 2025 3:30:18 PM (IST)



முத்தாலங்குறிச்சியில் அமைந்துள்ள பழமையான குணவதியம்மன் திருக்கோயிலில் விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியில் நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் கும்பாபிசேகம் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது கும்பாபிசேகம் நடைபெறுவதற்கான ஆரம்பகாலகட்டப்பணி விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதற்காக முதல் நாள் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புன்யாகவாசகம், பஞ்சகல்யம் சுத்தி, வாஸ்து சாந்தி, துர்கா ஹோமம், அஸ்திர ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் காலை 7மணிக்கு பஞ்சகல்யம், ருத்ர ஹோமம், ஐக்யமத்ய சுக்தஹோமம் நடந்தது.

இதையொட்டி முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து குணவதியம்மன்கோயில் முதலாம் கால யாகபூஜை நடந்தது. இதில் வேத பா£ராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாள் காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கோயில் விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. 

விழாவில், குணவதி அம்மன் பக்தஜனசபா கமிட்டி தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஸ்ரீதர், கமிட்டி உறுப்பினர் பால சீனிவாசன், சிவன் கோயில் அறங்காவலர் முத்தாலங்குறிச்சி காமராசு, ராமவிநாயகர் கோயில் அறங்காவலர் வள்ளிநாதன், லெட்சுமிநரசிம்மர் கோயில் அறங்காவலர் ஷேசப்பன், லெட்சுமி நரசிம்மர் கோயில் பக்த ஜனா கமிட்டி தலைவர் சோமசுந்தரம், சுவாமிநாதன், செல்லக்குட்டி, முன்னால் பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், ஊர் கமிட்டி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாலாஸ்தாபனம் ஏற்பாடுகளை செல்வம் பட்டர் குழுவினர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory