» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை நீரை அகற்றக்கோரிய பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல்: ஆட்சியரிடம் புகார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:15:32 PM (IST)

மழை நீரை அகற்றக்கோரிய பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளிலுள்ள மழை நீரை அகற்றக்கோரி மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிய பார் ரவி உள்ளிட்ட பலரை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், வடக்கு சோட்டையன்தோப்பு பகுதி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதோடு, சமூகவிரோத செயல்களில் ஈடுபடுத்தி வரும் பொன்பாண்டி (எ) பார் ரவியை ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரரான முருகேசன் உள்ளிட்டோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)










