» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லத்தி ஸ்போர்ட்ஸ்: மகாராஷ்டிரா மாநில அணி சாம்பியன்!

திங்கள் 8, டிசம்பர் 2025 3:05:49 PM (IST)



கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் போட்டியில் மகாராஷ்டிரா மாநில அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள தங்க மகாலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது .

இப்போட்டியில் பாண்டிச்சேரி, தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். 8 வயது முதல் 12 வயது, 12-18, 18-25 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார், தொழிலதிப பவுன் மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

மகாராஷ்டிரா,பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் பொதுச்செயலர் ஜாம்பாஜி, பாண்டிச்சேரி பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தலைவர் ரகுமான் சேத்து ஆகியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினர். தொழிலதிபர்கள் அமலி அ. பிரகாஷ், வெற்றி ஆகியோர் போட்டிகளை தொடக்கி வைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மகாராஷ்டிரா அணியினர் முதல் இடத்தையும், பாண்டிச்சேரி அணியினர் 2 ஆம் இடத்தையும், தமிழ்நாடு அணியினர் 3 ஆம் இடத்தையும் பெற்றனர். 

தமிழ் கல்ச்சுரல் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகு துரை, பழனி தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் பொருளாளர் கரிகாலன், தொழிலதிபர் பெனட் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory