» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவு: அரசுக்கு நன்றி தெரிவிக்க வந்தவர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 12:30:14 PM (IST)

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது, இதில் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50), சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் அரசு அறிவித்துள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறி, அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து கொண்டு, ரதம் போன்ற வாகனத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவரை ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)










