» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 12:08:14 PM (IST)

தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மறியல் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கு தொகை ரூபாய் 15,000 உடனடியாக வழங்க வேண்டும், மாநகராட்சியில் தனியார் அவர்லேண்ட் காண்டிராக்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் - பேரணி நடைபெற்றது.
மாநகராட்சியில் இருந்து புறப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் பழைய பேருந்து நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் ரசல், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத்தலைவர் காசி, மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி, பொருளாளர் வேல்முத்து, துணை செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, பத்திரகாளி, கருப்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியில் ஈடுபட்ட 68 பெண்கள் உட்பட 98பேரை மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)










